Saturday, Jan 24, 2026

மக்களவையில் இன்று ‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா‘ தாக்கல்!



vpdart2@gmail.com
vpdart2@gmail.com

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் ஒரே நாடு ஒரே தேர்தல்‘ குறித்த மசோதாவுக்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

குறித்த மசோதாவானது திங்ககிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என கடந்த வாரம் வெளியான அவை அலுவல் பட்டியலில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அலுவல் பட்டியல் திருத்தி அமைக்கப்பட்ட போது மசோதா இடம்பெறவில்லை. இந்நிலையிலேயே இன்று நண்பகல் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் குறித்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரைத்தபடி இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article


செய்திகள்

அறிவித்தல்

துயர்பகிர்வு

ஜோதிடம்

வீடியோ

விளம்பரம்

எம்மைபற்றி

தொடர்பு