Wednesday, Dec 10, 2025

விருப்ப நாடுகள் பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்கிய சுவிட்சர்லாந்து!



vpdart2@gmail.com
vpdart2@gmail.com

விருப்ப நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியாவை சுவிட்சர்லாந்து நீக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு 2025 ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆரம்ப காலங்களில் இந்தியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான வர்த்தக உறவு சிறப்பாகக் காணப்பட்ட போதிலும் தற்போது அந்த உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆரம்ப காலத்தில் சுவிட்சர்லாந்தின் விருப்பப் பட்டியலில் இருந்த இந்தியா தற்போது நீக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சட்டத்தின் படி விருப்பப் பட்டியலில் உள்ள நாடுகளின் நிறுவனங்களுக்கு 5% வரியும், அப் பட்டியலில் இடம்பிடிக்காத நாடுகளின் நிறுவனங்களுக்கு 10% வரியும் அறவிடப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த விருப்பப் பட்டியலில் இருந்து தற்போது இந்தியா நீக்கப்பட்டுள்ளதால் இந்திய நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article


செய்திகள்

அறிவித்தல்

துயர்பகிர்வு

ஜோதிடம்

வீடியோ

விளம்பரம்

எம்மைபற்றி

தொடர்பு